செய்திகள்
மத்திய அரசு பணி

மத்திய அரசு துறைகளில் 7 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன - ராஜ்யச்பாவில் மந்திரி தகவல்

Published On 2019-11-21 13:02 GMT   |   Update On 2019-11-21 13:02 GMT
கடந்த ஆண்டு மார்ச் 1-ம் தேதி நிலவரப்படி பல்வேறு மத்திய அரசு துறைகளில் 7 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன என மாநிலங்களவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி

பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய பணியாளர் நலத்துறை இணை மந்திரி ஜிதேந்திரா சிங் இன்று பதிலளித்தார். அவர் அளித்த பதிலில் கூறியதாவது:

குரூப் சி பிரிவில் அதிகபட்சமாக 6,83,823 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதேபோல், குரூப் பி பிரிவில் 89 ஆயிரத்து 638 பணியிடங்களும், குரூப் ஏ பிரிவில் 19 ஆயிரத்து 896 பணியிடங்களும் காலியாக உள்ளன.

இந்த பணியிடங்களில் சுமார் 1 லட்சத்து 5 ஆயிரம் இடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை நடப்பு ஆண்டில் நடைபெற்று வருகிறது என  தெரிவித்துள்ளார். 

மேலும், முந்தைய 2 ஆண்டு புள்ளி விவரங்களையும் கொடுத்துள்ள ஜிதேந்திரா சிங், மொத்தம் 4 லட்சத்து 8 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.
Tags:    

Similar News