கிச்சன் கில்லாடிகள்
குடைமிளகாய் சில்லி சீஸ் டோஸ்ட்

10 நிமிடத்தில் செய்யலாம் குடைமிளகாய் சில்லி சீஸ் டோஸ்ட்

Published On 2022-01-31 09:44 GMT   |   Update On 2022-01-31 09:44 GMT
குழந்தைகளுக்கு சீஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பத்தே நிமிடத்தில் செய்யக்கூடிய சூப்பரான ரெசியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பிரெட் ஸ்லைஸ் - 2,  
நறுக்கிய குடைமிளகாய் - 4 டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்),
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்,  
சீஸ்  துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் சீஸ் துருவல், குடைமிளகாய், பச்சை மிளகாய், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

தோசைக்கல்லை சூடாக்கி பிரெட் ஸ்லைஸ் வைத்து அதன் மீது சீஸ் கலவையைப் பரப்பவும்.

அடுப்பை சிறு தீயில் வைத்து மூடிபோட்டு, சீஸ் உருகிய உடன் இறக்கவும். சூடாகப் பரிமாறவும்.

சூப்பரான குடைமிளகாய் சில்லி சீஸ் டோஸ்ட் ரெடி

Tags:    

Similar News