தொழில்நுட்பம்
2019 ஐபேட்

ஆப்பிள் 2019 ஐபேட் இந்திய விற்பனை விவரம்

Published On 2019-09-28 05:39 GMT   |   Update On 2019-09-28 05:39 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் 2019 ஐபேட் 7-ம் தலைமுறை மாடலின் இந்திய விற்பனை விவரங்களை பார்ப்போம்.



ஆப்பிள் நிறுவனம் ஐபேட் 7-ம் தலைமுறை 2019 மாடலை புதிய ஐபோன் மற்றும் வாட்ச் சீரிஸ் 5 மாடல்களுடன் அறிமுகம் செய்தது. அறிமுகத்தின் போதே இவை அமெரிக்கா உள்பட உலகின் 25 நாடுகளில் செப்டம்பர் 30 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என ஆப்பிள் அறிவித்திருந்தது.

அந்த வகையில் ஆப்பிள் புதிய ஐபேட் 10.2-இன்ச் மாடலின் இந்திய விற்பனை அக்டோபர் 4 ஆம் தேதி துவங்கும் என தெரிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. ஆப்பிள் அதிகாரப்பூர்வ விற்பனையாளர்கள் விரைவில் இதற்கான முன்பதிவுகளை துவங்கலாம்.

ஆப்பிள் ஐபேட் 7-ம் தலைமுறை மாடல் சில்வர், ஸ்பேஸ் கிரே மற்றும் கோல்டு ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இதன் 32 ஜி.பி. வைபை மாடல் விலை ரூ. 29,900 என்றும் 128 ஜி.பி. வைபை மாடல் விலை ரூ. 37,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் 32 ஜி.பி. மற்றும் 128 ஜி.பி. வைபை + செல்லுலார் மாடல்களின் விலை முறையே ரூ. 40,900 மற்றும் ரூ. 48,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 



ஆப்பிள் ஐபேட் 2019 சிறப்பம்சங்கள்:

- 10.2 இன்ச் 2160x1620 பிக்சல் ரெட்டினா டிஸ்ப்ளே
- ஆப்பிள் ஏ10 ஃபியூஷன் சிப்செட்
- ஆப்பிள் பென்சில் வசதி
- 8 எம்.பி. கேமரா, f/2.4, 5P லென்ஸ், ஹைப்ரிட் ஐ.ஆர். ஃபில்ட்டர்
- 1.2 எம்.பி. கேமரா, f/2.2, ரெட்டினா ஃபிளாஷ்
- வைபை, ப்ளூடூத்
- டூயல் மைக்ரோபோன்
- 32.4 வாட் லித்தியம் பாலிமர் பேட்டரி
- ஐபேட் ஒ.எஸ்.
- 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத் 4.2
Tags:    

Similar News