தொழில்நுட்பம்
கோப்பு படம்

இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் உருவாகும் சியோமி ஸ்மார்ட்போன்

Published On 2019-03-23 05:14 GMT   |   Update On 2019-03-23 05:14 GMT
சியோமியின் புதிய ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Xiaomi



சியோமியின் Mi ஏ2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி எட்டு மாதங்களாகி விட்ட நிலையில், சியோமியின் இரண்டாவது ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது.

ஆர்சிட் ஸ்பிரவுட் எனும் குறியீட்டு பெயரில் சியோமி ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக எக்ஸ்.டி.ஏ. மூலம் வெளியான தகவல்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் சியோமி இரண்டு ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை பேம்பு ஸ்பிரவுட் மற்றும் காஸ்மோஸ் ஸ்பிரவுட் என இரண்டு ஸ்மார்ட்போன்களுடன் பிக்சிஸ் என்ற பெயரில் உருவாக்கி வருகிறது. இது இரு ஸ்மார்ட்போன்களின் சீன பதிப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படும் என தெரிகிறது.


கோப்பு படம்

முன்னதாக Mi ஏ1 மற்றும் Mi ஏ2 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களில் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டிருந்தது. புதிய ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 32 எம்.பி. செல்ஃபி கேமரா, 4-இன்-1 பிக்சல் பின்னிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் ஏற்கனவே பல்வேறு சியோமி ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டிருக்கிறது.

மற்ற சிறப்பம்சங்களை பொருத்தவரை ஸ்மார்ட்போனின் டாப் எண்ட் மாடல் ஸ்னாப்டிராகன் 6757 பிராசஸர் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் புதிய ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனில் டாட் ரக நாட்ச் வழங்கப்படலாம் என்றும் இதில் AMOLED டிஸ்ப்ளே பேனல் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News