செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2019-11-19 08:04 GMT   |   Update On 2019-11-19 08:04 GMT
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளதால் காவிரி டெல்டா பாசனத்திற்காக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தும், அதிகரித்தும் வருகிறது.

நேற்று அணைக்கு 6 ஆயிரத்து 43 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை இது 7 ஆயிரத்து 510 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 8-வது நாளாக தனது முழு கொள்ளளவான 120 அடியாக நீடிக்கிறது. நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளதால் காவிரி டெல்டா பாசனம் மற்றும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

டெல்டா பாசனத்திற்காக 5 ஆயிரம் கன அடியில் இருந்து 7 ஆயிரம் கன அடியாகவும், கால்வாய் பாசனத்திற்கு 800 கன அடியில் இருந்து 900 கன அடியாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News