தொழில்நுட்பம்
சியோமி ஸ்மார்ட் டிவி

ரூ. 15,999 அறிமுக விலையில் புது எம்.ஐ. டிவி அறிமுகம்

Published On 2021-08-05 10:21 GMT   |   Update On 2021-08-05 10:21 GMT
சியோமி நிறுவனத்தின் புதிய எம்.ஐ. ஸ்மார்ட் டிவி ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.


சியோமி நிறுவனம் புதிய எம்.ஐ. டிவி 4C மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய டிவி-யில் 32 இன்ச் ஹெச்டி ரெடி அல்ட்ரா-பிரைட் ஸ்கிரீன், விவிட் பிக்ச்சர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இதில் பேட்ச் வால் டீப் லேர்னிங் ஏ.ஐ. தொழில்நுட்பம் நாளடைவில் பயனர் விரும்பும் நிகழ்ச்சிகளை பரிந்துரை செய்கிறது.



சியோமி எம்.ஐ. டிவி 4C 32 இன்ச் அம்சங்கள்

- 32 இன்ச் 1366x768 பிக்சல் HD LED டிஸ்ப்ளே, விவிட் பிக்ச்சர் என்ஜின்
- 1.5GHz குவாட்-கோர் அம்லாஜிக் கார்டெக்ஸ்-A53 பிராசஸர்
- மாலி-450 MP3  GPU
- 1 ஜிபி ரேம்
- 8 ஜிபி eMMC மெமரி
- MIUI டிவி சார்ந்த ஆண்ட்ராய்டு மற்றும் பேட்ச்வால்
- எம்.ஐ. குவிக் வேக்
- வைபை 802.11 b/g/n (2.4 GHz), ப்ளூடூத் 4.2 
- 3 x HDMI, AV,  USB 2.0 x 2, ஈத்தர்நெட், S/PDIF போர்ட், AUX போர்ட்
- 2 x 10W ஸ்பீக்கர், DTS-HD

சியோமி எம்.ஐ. டிவி 4C 32 இன்ச் மாடல் ரூ. 15,999 எனும் அறிமுக விலையில் ப்ளிப்கார்ட், எம்.ஐ. வலைதளம் மற்றும் எம்.ஐ. ஹோம் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகிறது. 

Tags:    

Similar News