வழிபாடு
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று காலை நடந்த நரசிம்மர் சுவாமி தேரோட்டம்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று காலை நடந்த நரசிம்மர் சுவாமி தேரோட்டம்

Published On 2022-03-26 04:47 GMT   |   Update On 2022-03-26 06:50 GMT
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி இன்று நரசிம்மர் சுவாமி தேரோட்டம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நரசிம்மர் சுவாமி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.  கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் இந்த விழா தொடங்கியது. 29-தேதி வரை நரசிம்மசுவாமி பிரமோற்சவ விழா நடக்கிறது.

 வைணவ திருத்தலங்களில் மிகவும் தொன்மை வாய்ந்த, ஆழ்வார்களால் போற்றி பாடப்பெற்ற திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், யோகநரசிம்மர் யோகநிலையில் மேற்கு நோக்கி நோய் தீர்க்கும் பெருமானாக எழுந்து அருள்பாலித்து வருகிறார்.

இக்கோயிலில் உள்ள யோக நரசிம்மரின் பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று இன்று காலையில் நரசிம்மர் சுவாமி தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

 மாடவீதிகளில் நரசிம்மர் சுவாமிதேர் வலம் வந்து 9 மணிக்கு நிலையை அடைந்தது. வருகிற 29-ஆம் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. தேரோட்ட நிகழ்ச்சியையொட்டி திருவல்லிக்கேணியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
 
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து இருந்தனர்.

இதையும் படிக்கலாம்...அரசமரத்தை எந்த கிழமையில் சுற்றினால் என்ன பிரச்சனை தீரும்...
Tags:    

Similar News