ஆட்டோமொபைல்
வால்வோ எஸ்60

வால்வோ எஸ்60 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

Published On 2020-11-24 09:11 GMT   |   Update On 2020-11-24 09:11 GMT
வால்வோ நிறுவனத்தின் புதிய எஸ்60 மாடல் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


வால்வோ நிறுவனம் தனது மூன்றாம் தலைமுறை வால்வோ எஸ்60 மாடலை நவம்பர் 27 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இந்த நிகழ்வு டிஜிட்டல் முறையில் நடைபெறுகிறது. 

இந்தியாவில் மூன்றாம் தலைமுறை வால்வோ எஸ்60 மாடல் பெட்ரோல் வேரியண்ட் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது. இது டாப் எண்ட் ஆர் டிசைன் வேரியண்ட் ஆக இருக்கும் என தெரிகிறது. இதில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் யூனிட் வழங்கப்படுகிறது. 



இதே என்ஜின் வெவ்வேறு செயல்திறன் வழங்கும் வகையில் டியூன் செய்யப்படுகிறது. இது குறைந்தபட்சம் 190 ஹெச்பி துவங்கி அதிகபட்சம் 390 ஹெச்பி வரையிலான செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட இருக்கிறது.

புதிய வால்வோ எஸ்60 மாடல் இந்திய சந்தையில் பிஎம்டபியூ 3 சீரிஸ், மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ், ஜாகுவார் எக்ஸ்இ மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் ஆடி ஏ4 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.

Tags:    

Similar News