லைஃப்ஸ்டைல்
வாயுத்தொல்லை

வாயுத்தொல்லை... எப்படித் தவிர்க்கலாம்?

Published On 2020-08-14 09:20 GMT   |   Update On 2020-08-14 09:20 GMT
புரதச்சத்துமிக்க உணவுகளை அதிகமாகச் சாப்பிட்டால் வயிற்றுப்பொருமல் ஏற்படுவது, மந்தமாக உணர்வது, வாயுத்தொல்லை ஏற்படுவது எல்லோருக்கும் சகஜம்தான். இதை தவிர்க்கும் எளிய வழிமுறைகளை அறிந்துகொள்ளலாம்.
புரதச்சத்துமிக்க உணவுகளை அதிகமாகச் சாப்பிட்டால் வயிற்றுப்பொருமல் ஏற்படுவது, மந்தமாக உணர்வது, வாயுத்தொல்லை ஏற்படுவது எல்லோருக்கும் சகஜம்தான். இது நோயோ, பிரச்னையோ கிடையாது. இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

* அன்றைக்கு நீங்கள் சாப்பிட்ட உணவுக்கு ஏற்றபடி, உடலுழைப்பு இல்லையென்றால் வாயுத்தொல்லை வரும்.

* தூக்கத்தில் பிரச்னை இருப்பவர்களுக்கும், செரிமானப் பிரச்னையும் அதன் தொடர்ச்சியாக வாயுத்தொல்லையும் ஏற்படும்.

* உப்பு, காரம், மசாலா தூக்கலான ஹோட்டல் உணவுகளை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு புரதச்சத்துமிக்க உணவை கொஞ்சம் கூடுதலாகச் சாப்பிட்டாலும் வாயுத்தொல்லை வரலாம்.

* புரத உணவுகளை வேகவைத்துச் சாப்பிடும்போது வாயுத்தொல்லை வராது. எண்ணெயில் பொரித்துச் சாப்பிட்டால் வரும்.

* புரத உணவுகளை அதிகம் சாப்பிடுகிற அன்று நார்ச்சத்துமிக்க காய்கறி சாலட் சாப்பிட்டால், செரிமானம் சுலபமாகி, வாயுத்தொல்லை ஏற்படாது. 
Tags:    

Similar News