செய்திகள்
மாயாவதி

மம்தா மீதான தாக்குதல் தொடர்பாக உயர்மட்ட விசாரணை: மாயாவதி வலியுறுத்தல்

Published On 2021-03-13 02:08 GMT   |   Update On 2021-03-13 02:08 GMT
தேர்தலின்போது மம்தா பானர்ஜி திடீரென காயமடைந்திருப்பது மிகவும் சோகமானது, துரதிர்ஷ்டவசமானது. அவர் விரைவில் நலமடைய நான் வாழ்த்துகிறேன் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
லக்னோ :

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, கடந்த புதன்கிழமை வேட்புமனு தாக்கலுக்குப் பின் தன்னை சிலர் தாக்கிவிட்டதாக குற்றம்சாட்டினார். இடதுகாலில் காயமடைந்த அவர், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘தேர்தலின்போது மம்தா பானர்ஜி திடீரென காயமடைந்திருப்பது மிகவும் சோகமானது, துரதிர்ஷ்டவசமானது. அவர் விரைவில் நலமடைய நான் வாழ்த்துகிறேன்.

அதேநேரம், தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு, ஒரு உயர்மட்ட விசாரணை நடத்தவேண்டும் என்று பகுஜன் சமாஜ் சார்பில் வலியுறுத்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள மற்றொரு டுவிட்டர் பதிவில், ‘இந்த சம்பவத்தை மனதில்கொண்டு, மேற்கு வங்காளத் தேர்தலில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சியின் அனைத்து வேட்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tags:    

Similar News