செய்திகள்

கர்நாடகாவில் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை: துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் பரிசு

Published On 2017-09-08 10:03 GMT   |   Update On 2017-09-08 10:03 GMT
பெங்களூருவில் பத்திரிகையாளரை சுட்டுக் கொன்ற நபர்கள் குறித்து துப்பு கொடுத்தால் 10 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
பெங்களூரு:

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராஜேஷ்வரி நகரில் வசித்து வந்தவர் கவுரி லங்கேஷ் (55). பிரபல நாளிதழ்களில் பணியாற்றிய இவர் வாரப்பத்திரிகை ஒன்றையும் நடத்தி வந்தார். துணிச்சல் மிக்க பத்திரிகையாளரான இவர் மதவாதத்திற்கு எதிராக தொடர்ந்து எழுதி வந்துள்ளார்.

இவர் கடந்த 5-ம் தேதி மாலை தன் வீட்டில் இருந்த போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியைத் தேடி வருகின்றனர். சம்பவம் நடந்து 3 நாட்கள் ஆகியும் கொலையாளிகள் பற்றி துப்பு துலங்கவில்லை. சி.சி.டி.வி கேமரா மூலமும் கொலையாளிகள் உருவம் தெரியவில்லை.

எனவே கொலையாளிகள் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

சிறப்பு விசாரணைக்குழு விசாரணையை தொடங்கி விட்டதாகவும், இதுதொடர்பான அதிக தகவல்களை பெற விரும்புவதால் இந்த பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் உள்துறை மந்திரி ராமலிங்க ரெட்டி கூறினார்.
Tags:    

Similar News