செய்திகள்
சிவப்பு நிறமாக மாறிய பி.ஏ.பி., வாய்க்கால்.

சாயக்கழிவுநீர் திறந்து விடப்பட்டதால் காங்கேயத்தில் சிவப்பு நிறமாக மாறிய பி.ஏ.பி., வாய்க்கால் - விவசாயிகள் அதிர்ச்சி

Published On 2021-10-16 09:41 GMT   |   Update On 2021-10-16 09:41 GMT
தொடர்ந்து 5 மணி நேரத்துக்கும் மேலாக சிவப்பு நிறத்தில் தண்ணீர் ஓடியது.
காங்கேயம்:

திருப்பூர் மாவட்டத்தில் திருமூர்த்தி அணை வாயிலாக செயல்படுத்தப்படும் பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தில் (பி.ஏ.பி.,) கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது. 

தற்போது நான்காம் மண்டலத்தில் இரண்டாவது சுற்றுக்கு பி.ஏ.பி., வாய்க் காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதில் வெள்ள கோவில் கிளை கால்வாயில் 125 கன அடி வீதம் வெள்ள கோவில் பகுதியில் உள்ள 48 ஆயிரம் ஏக்கருக்கு தண்ணீர் செல்கிறது.

சிவப்பு கலரில் தண்ணீர் இந்நிலையில் காங்கேயம் - திருப்பூர் சாலையில் செல்லும் பி.ஏ.பி., வாய்க்காலில் பாசன நீரானது சிவப்பு கலரில் வந்தது. இதைப்பார்த்து விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். 

மேலும் நீரை  மாதிரிக்காக பாட்டிலில் சேகரித்து, வெள்ளகோவில் கிளை வாய்க்கால் தொடங்கும் பகுதிக்கே சென்று பார்த்தனர். ஆனால் பாசன நீர் நிறம் மாறியதற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 

இதுவரை பி.ஏ.பி., பாசன நீரில் எந்தக் கழிவும் கலந்ததில்லை. தற்போது முதன் முறையாக அபாயகரமான கழிவு நீரை விட்டுள்ளனர். சாயக்கழிவு நீர் அல்லது எண்ணை ஆலை கழிவாக இருக்கலாம் எனத்தெரிகிறது. தொடர்ந்து 5 மணி நேரத்துக்கும் மேலாக சிவப்பு நிறத்தில் தண்ணீர் ஓடியது.

பொதுப்பணித்துறை அதிகாரிகள், தண்ணீர் மாதிரியை ஆய்வு செய்து கழிவு நீரை கலந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 
Tags:    

Similar News