செய்திகள்
ரஷித் கான்

இளம் வயதில் டெஸ்ட் அணி கேப்டன்: 8 நாள் வித்தியாசத்தில் உலக சாதனைப் படைத்த ரஷித் கான்

Published On 2019-09-05 10:42 GMT   |   Update On 2019-09-05 10:42 GMT
வங்காளதேச அணிக்கெதிரான டெஸ்டில் கேப்டனாக பதவி ஏற்றதன் மூலம், சர்வதேச அளவில் இளம் வயதில் கேப்டன் பதவியை பெற்ற வீரர் என்ற சாதனையை ரஷித் கான் படைத்துள்ளார்.
வங்காள தேசம் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் சிட்டோகிராமில் இன்று தொடங்கியது. இதில் ரஷித் கான் முதன் முதலாக  ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார்.

ரஷித் கானுக்கு 20 வயது 350 நாட்கள்தான் ஆகிறது. இதன் மூலம் இளம் வயதில் டெஸ்ட் அணிக்கு தலைமை தாங்கியவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் ஜிம்பாப்வேயின் தைபு 20 வயது 358 நாட்களில் இலங்கை அணிக்கெதிராக கேப்டனாக பொறுப்பேற்றிருந்தார்.

தற்போது 8 நாட்கள் வித்தியாசத்தில் ரஷித் கான் தைபுவின் சாதனையை முறியடித்து முதல் இடம் பிடித்துள்ளார்.

இந்தியாவிற்காக பட்டோடி 21 வயது 77 நாட்களில் கேப்டனாக பொறுப்பேற்று சாதனைப் படைத்துள்ளார். பாகிஸ்தானுக்காக வக்கார் யூனிஸ் 22 வயது 15 நாட்களில் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். ஸ்மித் 22 வயது 82 நாட்களில் கேப்டன் பதவியை ஏற்று சாதனைப் படைத்துள்ளார்.
Tags:    

Similar News