உள்ளூர் செய்திகள்
தாமிரபரணி ஆற்றில் புஷ்கர விழா நடைபெற்ற போது எடுத்தப்படம்.

குருபெயர்ச்சி விழாவை முன்னிட்டு தாமிரபரணி நதிக்கு சிறப்பு அபிஷேகம்

Published On 2022-04-15 09:27 GMT   |   Update On 2022-04-15 09:27 GMT
தமிழ் புத்தாண்டு மற்றும் குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி நதிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
செய்துங்கநல்லூர்:

தமிழ் புத்தாண்டு மற்றும் குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள முத்தாலங்குறிச்சி குணவதியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டது. குணவதி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடந்தது.

அதன்பின் குருபெயர்ச்சியை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் புஷ்கர திருவிழா நடந்தது. இதற்காக கோவிலில் இருந்து பூர்ணகும்பம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து தாமிரபரணிக்கு பால், இளநீர், மஞ்சள், சந்தனம், குங்குமம் உள்பட 21 பொருட்களால் அபிசேகம் நடந்தது. தொடர்ந்து பூர்ணகும்ப அபிசேகம் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் கந்தசுப்பு, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, கிராம நிர்வாக அதிகாரி சக்தி விக்னேஸ்வரன், உதவியாளர் பாலகிருஷ்ணன், ஊர் பிரமுகர்கள் அங்கப்பன், முருகன், லெட்சுணன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

 இதற்கான ஏற்பாடுகளை அண்ணாமலை, செந்தில் சகோதரர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News