வழிபாடு
சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2022-01-10 08:47 GMT   |   Update On 2022-01-10 08:47 GMT
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் 4-வது படைவீடாக சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் 4-வது படைவீடாக சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது சுப்பிரமணியசாமி வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

இரவு படிச்சட்டத்தில் வீதி உலா நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் காலை, மாலை நேரங்களில் படிச்சட்டத்தில் சாமி உள்பிரகார புறப்பாடு நடக்கிறது. விழாவில் 13-ந்தேதி இரவு பஞ்சமூர்த்திசாமிகள் வெள்ளி மயில் வாகனத்தில் புறப்பாடும், 18-ந்தேதி தைப்பூச நாளையொட்டி காலை 10 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் சாமி புறப்பாடும், வஜ்ரதீர்த்ததில் தீர்த்தவாரியும் நடக்கிறது.

கொரோனா விதிமுறைகள் அமலில் இருப்பதால் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் ஜீவானந்தம் மற்றும் கோவில் பணியாளர்கள், நிர்வாகத்தினர், உபயதாரர்கள், செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News