உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

உடுமலையில் சிலம்ப பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

Published On 2022-05-06 07:36 GMT   |   Update On 2022-05-06 07:36 GMT
துணை கலெக்டர் ரவிச்சந்திரன் பேசும் போது,பெண்கள் தற்காப்பு கலையை கற்றுக் கொள்வது அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் என்றார்.
உடுமலை:

உடுமலை அரசு ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதி மாணவிகளுக்கு  கடந்த மூன்று வருடங்களாக உடுமலை கிளை நூலகம் எண், 2 நூலக வாசகர் வட்டம்,  பகத்சிங் சிலம்பம் களறி மார்ஷியல் அறக்கட்டளை இணைந்து இலவச சிலம்பப் பயிற்சி வழங்கியது.

மாணவிகளிடையே தன்னம்பிக்கை வளர்க்க வேண்டும் .தற்காப்புக் கலையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் மகளிர் இல்ல காப்பாளினி சாந்தகுமாரி துறை அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் இந்த பயிற்சியை  வழங்க ஒத்துழைத்தார். 

இந்த பயிற்சி பெற்ற மாணவிகளை  பாராட்டி பட்டயம் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி விடுதி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு நூலகர் கணேசன் தலைமை வகித்தார். விடுதி காப்பாளர் ஹேமாமாலினி  வரவேற்றுப் பேசினார்.

 இதில் திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் நல துணை ஆட்சியர் ரவிச்சந்திரன் மற்றும்ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் கனிமொழி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிலம்ப பயிற்சியில் தேர்ச்சி பெற்ற அரசு விடுதி மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினர் .

இது குறித்து தனி வட்டாட்சியர் கனிமொழி பேசும்போது:-

அரசு கல்லூரி விடுதி மாணவிகளுக்கும் இலவச சிலம்ப பயிற்சி அளிக்க மாவட்ட கலெக்டர்  ஒப்புதலுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். துணை கலெக்டர் ரவிச்சந்திரன் பேசும் போது,பெண்கள் தற்காப்பு கலையை கற்றுக் கொள்வது அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும்.

மேலும் மனம் ஒருநிலைப்படுத்தவும் சுயசிந்தனை வளர்க்கவும் இந்தப் பயிற்சி உதவும் எனக் கூறினார். மாணவிகள் சிலம்ப பயிற்சிகளை செய்து காட்டினர். மாணவி சௌந்தர்யா வரலாற்றில் இந்திய பெண்கள் என்ற தலைப்பில் பேசினார்.

மாணவிகளை உற்சாகப்படுத்தும் விதமாகஅம்மாபட்டி பள்ளி ஆசிரியர் காளிமுத்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து சான்றிதழ் மற்றும் கேடயங்களை சொந்தசெலவில் மாணவிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சிகளை சிலம்ப ஆசான் வீரமணி தொகுத்து வழங்கினார் . 

நிகழ்ச்சியில் உடுமலை கல்லூரி மாணவிகள் விடுதி காப்பாளர் ரூபிஉஷா,  திருப்பூர் மாணவர் விடுதி காப்பாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர் நிறைவாக பணி மாறுதல் பெற்றுச் சென்ற காப்பாளினி சாந்தகுமாரி நன்றி கூறினார்.
Tags:    

Similar News