செய்திகள்
முஷ்பிகுர் ரஹிம்

டி20 உலகக் கோப்பை- இலங்கை வெற்றிக்கு 172 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வங்காளதேசம்

Published On 2021-10-24 11:56 GMT   |   Update On 2021-10-24 11:56 GMT
அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய துவக்க வீரர் முகமது நயிம் 62 ரன்கள் குவித்து அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.
சார்ஜா:

டி20 உலகக் கோப்பை சூப்பர்-12 சுற்றில் இன்று சார்ஜாவில் நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை, வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் அணியின் துவக்க வீரர் லிட்டன் தாஸ் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷாகிப் அல் ஹசன் 10 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதேசமயம் மறுமுனையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மற்றொரு துவக்க வீரர் முகமது நயிம் 62 ரன்கள் குவித்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தார். ஆபிப் உசைன் 7 ரன்களே எடுத்தார்.

அதிரடியாக ஆடிய முஷ்பிகுர் ரஹிம் அரை சதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்த, வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் சேர்த்தது.  முஷ்பிகுர் ரஹிம் 36 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 57 ரன்கள் (நாட் அவுட்) குவித்தார். இதேபோல் கேப்டன் மஹ்முதுல்லா ஆட்டமிழக்காமல் 10 ரன்கள் எடுத்திருந்தார்.

இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.
Tags:    

Similar News