ஆன்மிகம்
அஷ்டமி யாகம்

நாதன்கோவில் ஜெகநாத பெருமாள் கோவிலில் அஷ்டமி யாகம்

Published On 2021-09-15 04:53 GMT   |   Update On 2021-09-15 04:53 GMT
ஜெகநாத பெருமாள் கோவிலில் சுக்ல பட்ச அஷ்டமியை முன்னிட்டு செண்பகவல்லி தாயாருக்கு காலை அஷ்டமி யாகம் நடைபெற்றது. மேலும் மூலவர் உற்சவம், திருமஞ்சனம், தாயார் புறப்பாடு நடைபெற்றது.
கும்பகோணத்தை அடுத்த நாதன்கோவில் ஜெகநாத பெருமாள் கோவிலில் சுக்ல பட்ச அஷ்டமியை முன்னிட்டு நேற்று சிறப்பு அஷ்டமி யாகம் நடைபெற்றது. இக்கோவிலில் ஒவ்வொரு வளர்பிறை அஷ்டமியிலும் சுக்ல பட்ச அஷ்டமி யாகம் நடத்தப்படுவது வழக்கம்.

நேற்று வளர்பிறை அஷ்டமி என்பதனால் செண்பகவல்லி தாயாருக்கு காலை அஷ்டமி யாகம் நடைபெற்றது. மேலும் மூலவர் உற்சவம், திருமஞ்சனம், தாயார் புறப்பாடு நடைபெற்றது. யாகத்துக்கான ஏற்பாடுகளை ஜெகநாத பெருமாள் கைங்கர்ய சபா மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News