ஆன்மிகம்
சுசீந்திரம் கோவில்

சுசீந்திரம் கோவிலில் குருப்பெயர்ச்சியையொட்டி பக்தர்கள் அர்ச்சனை செய்ய தடை

Published On 2020-11-13 07:51 GMT   |   Update On 2020-11-13 07:51 GMT
குருப்பெயர்ச்சியையொட்டி கொரோனா தடுப்பு நடவடிக்கையை கருத்தில் கொண்டு சுசீந்திரம் கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் முதற்கடவுளான தட்சிணாமூர்த்தியை பக்தர்கள் குரு பகவானாக வழிபட்டு வருகிறார்கள். இங்கு குருப்பெயர்ச்சியையொட்டி பக்தர்கள் மஞ்சள் நிற ஆடை, கொண்டை கடலை மாலை போன்றவற்றை குருபகவானுக்கு அணிவித்து அர்ச்சனை செய்து பரிகார பூஜைகள் செய்வார்கள்.

இந்த ஆண்டு குரு பெயர்ச்சி வருகிற 15-ந் தேதி வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இரவு 9.50 மணிக்கு நடக்கிறது. குரு பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்கிறார். அன்றைய தினம் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையை கருத்தில் கொண்டு சுசீந்திரம் கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதனடிப்படையில் கோவிலில் தட்சிணாமூர்த்தியை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், மஞ்சள் ஆடை, கொண்டைகடலை மாலை போன்றவற்றை அணிவித்து அர்ச்சனை மற்றும் பரிகார வழிபாடுகள் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News