உள்ளூர் செய்திகள்
பிரம்ம லிங்கேஸ்வரர் கோவிலில் புதிய உண்டியல் வைத்து பூஜை செய்யப்பட்டது.

முருங்கத்தொழுவு பிரம்மலிங்கேஸ்வரர் கோவிலில் புதிய உண்டியல் நிறுவப்பட்டது

Published On 2022-05-07 10:14 GMT   |   Update On 2022-05-07 10:14 GMT
சென்னிமலை அருகே உள்ள முருங்கத்தொழுவு பிரம்மலிங்கேஸ்வரர் கோவிலில் புதிய உண்டியல் நிறுவப்பட்டு பூஜை செய்யப்பட்டது.
சென்னிமலை:

சென்னிமலை அருகே உள்ள முருங்கத்தொழுவு பிரம்மலிங்கேஸ்வரர் கோவிலில் புதிய உண்டியல் நிறுவப்பட்டு பூஜை செய்யப்பட்டது.

சென்னிமலை சுப்ரமணிய சுவாமி கோவில் நிர்வாகத்துக்கு உட்பட்ட முருங்கத்தொழுவு கிராமத்தில் அமைந்துள்ளது பிரமலிங்கேஸ்வரர் கோவில். 

இந்த கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அன்னக்கொடி உத்தரவின் பேரில் புதிய இரும்பு உண்டியல் ஒன்று நிறுவப்பட்டது. 

ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிய உண்டியல் நிறுவ உதவி ஆணையர் உத்தரவு பெறப்பட்டு. பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் உண்டியல் நிறுவப்பப்படாமல் இருந்தது.

தற்போது உதவி ஆணையர் உண்டியல் நிறுவ வேண்டும் என உத்தரவிட்டதன் பேரில் ஒரு சிலர் ஆட்சேபணை தெரிவித்தும் கோவில் தக்கார் ரமணிக்காந்தன்  முன்னிலையில் புதிய உண்டியல் நிறுவப்பட்டு, பெருந்துறை சரக கோவில் ஆய்வாளர் ரவிக்குமார் உண்டியலுக்கு இலாக்கா முத்திரையிடார். 

இந்த நிகழ்ச்சியில் செயல் அலுவலர்கள் சுகுமார், ஸ்ரீதர், விசுவநாதன், உமா செல்வி, அந்தியூர் சரகம் ஆய்வாளர் மாணிக்கம், ஈரோடு ஆய்வாளர் தினேஷ்குமார், போலீசார், சென்னிமலை கோவில் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
Tags:    

Similar News