வழிபாடு
திருப்பதி

திருப்பதியில் 17-ந்தேதி முதல் ஆண்டாள் திருப்பாவை

Published On 2021-12-08 05:41 GMT   |   Update On 2021-12-08 08:31 GMT
இந்த ஆண்டு 16-ந்தேதி மார்கழி மாதம் பிற்பகல் 12.26 மணிக்கு பிறப்பதால் மறுநாள் 17-ந்தேதி முதல் ஜனவரி மாதம் 14-ந்தேதி வரை திருப்பாவை சேவை நடத்தப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி :

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் 11 மாதங்கள் வரை ஏழுமலையானுக்கு சுப்ரபாத சேவை அதிகாலை நேரத்தில் துயில் எழுப்பப்பட்டு அன்றைய நாளின் இதர சேவைகள் தொடர்ந்து நடைபெறும்.

ஆனால் தமிழ் மாதமான மார்கழி மாதத்தில் மட்டும் ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடி ஏழுமலையான் துயில் எழுப்பப்படுகிறார். இந்த ஆண்டு 16-ந்தேதி மார்கழி மாதம் பிற்பகல் 12.26 மணிக்கு பிறப்பதால் மறுநாள் 17-ந்தேதி முதல் ஜனவரி மாதம் 14-ந்தேதி வரை திருப்பாவை சேவை நடத்தப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கோவிந்தராஜர் கோவில், பத்மாவதி தயார் கோவில், கபில் தீர்த்தம், ஸ்ரீநிவாச மங்காபுரம் ஆகிய தேவஸ்தான கோவில்களிலும் கடந்த 2 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
Tags:    

Similar News