தொழில்நுட்பம்
போக்கோ எம்2 ப்ரோ

இந்தியாவில் செல்போன்கள் விலை உயர்கிறது

Published On 2020-10-04 03:45 GMT   |   Update On 2020-10-03 12:04 GMT
உதிரிபாகங்களுக்கு இறக்குமதி வரி உயர்த்தப்பட்டு இருப்பதால் இந்தியாவில் செல்போன்கள் விலை 3 சதவீதம் வரை அதிகரிக்க இருக்கிறது.


கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுக்க தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருந்ததால் மின்னணு மற்றும் மின்சாதன பொருட்களின் தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டன. எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிப்பும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதில் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பணியும் பெருமளவில் பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் சமீபத்தில் உற்பத்தி தொடங்கி உள்ளது. 



இதற்கிடையே செல்போன் உதிரிபாகங்கள் இறக்குமதி செய்வதற்கான வரியை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இம்முறை இறக்குமதி வரி 10 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதன்காரணமாக செல்போன் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புதிய வரி உயர்வு காரணமாக செல்போன்களின் விலை 3 சதவீதம் வரை உயர வாய்ப்பு உள்ளது.

உலக சந்தையில், 'நம் நாட்டு உற்பத்தி பொருட்கள் அதிகம் இடம்பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். இதனால் குறிப்பிட்ட உதிரி பாகங்களை இறக்குமதி செய்யும் நிலை உள்ளது. தற்போது செல்போன் உதிரி பாகங்களின் இறக்குமதி வரி 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன்காரணமாக செல்போன்களின் விலை 3 சதவீதம் வரை உயரும்.'

என இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கூட்டமைப்பின் தலைவர் பங்கஜ் மோகிந்திரு கூறி உள்ளார்.
Tags:    

Similar News