செய்திகள்
அருண் ஜெட்லி சிலையை திறந்து வைத்த அமித்ஷா

டெல்லி கோட்லா மைதானத்தில் அருண் ஜெட்லி சிலை - அமித்‌ஷா திறந்து வைத்தார்

Published On 2020-12-28 23:33 GMT   |   Update On 2020-12-28 23:33 GMT
முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி பிறந்தநாளை முன்னிட்டு டெல்லி மைதானத்தில் 6 அடி உயரத்தில் அவரது முழு உருவச்சிலையை உள்துறை மந்திரி அமித்‌ஷா நேற்று திறந்து வைத்தார்.
புதுடெல்லி:

மறைந்த முன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லி கடந்த 1999-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை 14 ஆண்டுகள் டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தலைவராக இருந்தார். இதனை போற்றும் வகையில் டெல்லியில் உள்ள கிரிக்கெட் விளையாட்டு மைதானமான பெரோ‌ஷா கோட்லா மைதானத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.

இந்நிலையில், அருண் ஜெட்லியின் 68-வது பிறந்த நாளையொட்டி அந்த மைதானத்தில் 6 அடி உயரத்தில் அவரது முழு உருவச்சிலையை உள்துறை மந்திரி அமித்‌ஷா நேற்று திறந்து வைத்தார்.

அப்போது அமித்‌ஷா பேசுகையில், ‘கிரிக்கெட்டில் 2 வகையான பேர் உள்ளனர். ஒன்று, வீரர்கள். இன்னொன்று விளையாடுவதற்கான சூழலை உருவாக்குபவர்கள். விளையாடுவதற்கான சூழலை உருவாக்குபவர்களின் பங்களிப்பும் நிறையவே இருக்கிறது. அதற்காகவே நாங்கள் இந்த சிலையை திறந்து வைக்கிறோம்’ என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் விமான போக்குவரத்துத்துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி, துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா, கவுதம் காம்பிர் எம்.பி. மற்றும் அருண்ஜெட்லியின் மகன் ரோகன் ஜெட்லி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News