ஆட்டோமொபைல்
மெர்சிடிஸ் பென்ஸ் EQC

மெர்சிடிஸ் பென்ஸ் EQC 400 முன்பதிவு மீண்டும் துவக்கம்

Published On 2021-03-19 07:42 GMT   |   Update On 2021-03-19 07:42 GMT
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் முன்பதிவு மீண்டும் துவங்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. EQC 400 மாடலை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்தது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் EQC 400 எலெக்ட்ரிக் கார் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் துவக்க விலை ரூ. 99.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.



புதிய பென்ஸ் EQC 400 மாடல் சி.பி.யு. முறையில் இந்தியா கொண்டுவரப்படுகிறது. முதற்கட்டமாக 50 EQC யூனிட்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டன. இவை அனைத்தும் கடந்த ஆண்டு இறுதியிலேயே விற்றுத் தீர்ந்தன. தற்போது இரண்டாம் கட்ட EQC யூனிட்களை இந்தியாவில் இறக்குமதி செய்ய மெர்சிடிஸ் பென்ஸ் முடிவு செய்து இருக்கிறது.

இம்முறை எத்தனை யூனிட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது என்ற விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. புதிய EQC மாடல் பென்ஸ் GLC மாடல் உருவாகும் அதே பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. அதன்படி புது மாடலிலும் GLC மாடல்களில் உள்ளதை போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News