செய்திகள்
மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை

இந்தியாவின் கலாச்சாரம் உலகை ஈர்க்கும் மையம் -மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பெருமிதம்

Published On 2020-11-29 06:10 GMT   |   Update On 2020-11-29 07:54 GMT
இந்தியாவின் கலாச்சாரம், வேதத்தை அறிந்துகொள்வதற்காக சிலர் இந்தியா வந்து வாழ்நாள் முழுவதும் தங்கியிருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன், மக்களுடன் கலந்துரையாடுகிறார். அவ்வகையில் இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:-

மிகவும் பழமையான அன்னபூரணி சிலை கனடாவில் இருந்து மீட்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன்பு வாரணாசியில் இருந்து கடத்தப்பட்ட சிலையானது இப்போது மீட்கப்பட்டு இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

டெல்லி தேசிய அருங்காட்சியகத்திற்கு செல்லாமல் இனி வீட்டில் இருந்ததே நாம் காணொளியில் பார்க்கலாம். 

இந்தியாவின் கலாச்சாரம், வேதம் எப்போதும் உலகை ஈர்க்கும் மையமாக இருந்து வருகிறது.  சிலர் அவற்றைத் தேடி இந்தியா வந்து வாழ்நாள் முழுவதும் தங்கியிருந்தனர். சிலர் இந்தியாவின் கலாச்சார தூதர்களாக தங்கள் நாடுகளுக்குத் திரும்பினர். நியூசிலாந்து நாட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கவுரவ் சர்மா, அமைச்சராக சமஸ்கிருதத்தில் பதவியேற்றார். இந்திய கலாச்சாரத்தை வெளிநாடுகளில் பரப்புவது மிகவும் பெருமை அளிக்கிறது.

தீவிர ஆலோசனைகளுக்கு பின்னர் பாராளுமன்றம் சமீபத்தில் வேளாண் சீர்திருத்த சட்டங்களை நிறைவேற்றியது. இந்த சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்கு புதிய உரிமைகளையும் வாய்ப்புகளையும் அளித்துள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் பறவை மனிதர் என அழைக்கப்படும் சலீம் அலி குறித்து, பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார். பறவைகளை ரசிக்க, அவை குறித்த தகவல்களை திரட்ட நமக்கு பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளார் என்றும் மோடி கூறினார்.
Tags:    

Similar News