செய்திகள்
கொரோனா தடுப்பூசி

மேட்டுப்பாளையம் வட்டாரத்தில் 54 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-07-21 11:30 GMT   |   Update On 2021-07-21 11:30 GMT
மேட்டுப்பாளையம் வட்டார பகுதியில் இதுநாள் வரை சுமார் 54 ஆயிரத்து 237 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேட்டுப்பாளையம்:

மேட்டுப்பாளையம் வட்டார பகுதியில் ஒரு நகராட்சி, 2 பேரூராட்சிகள் மற்றும் 17 கிராம ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவின் பேரில் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார் தமிழக அரசு வழங்கும் கொரோனா தடுப்பூசிகளை மாநகராட்சி, நகராட்சி , பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கு தடுப்பூசிகளின் எண்ணிக்கையின் படி பிரித்து அனுப்பி வைத்து வருகிறார். 

இந்தநிலையில் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவ மனையில் தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் கண்ணன் மேட்டுப்பாளையம் நகராட்சி நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் வினோத்குமார் மேற்பார்வையில் இதுநாள் வரை 18 ஆயிரத்து 739 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. மேலும் காரமடை வட்டார மருத்துவ அலுவலர் சுதாகர் மேற்பார்வையில் காரமடை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாக வட்டார மேற்பார்வையாளர் சண்முகசுந்தரம் மற்றும் மருத்துவ குழுவினர் 2 பேரூராட்சிகள் மற்றும் 17 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு 36 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 

மேட்டுப்பாளையம் வட்டார பகுதியில் இதுநாள் வரை சுமார் 54 ஆயிரத்து 237பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News