செய்திகள்
ஹேமந்த் சோரன்

ஜார்க்கண்ட் தேர்தல்: இரு தொகுதிகளிலும் ஹேமந்த் சோரன் வெற்றி

Published On 2019-12-23 15:02 GMT   |   Update On 2019-12-23 15:02 GMT
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க கவர்னரிடம் உரிமை கோரினார்.
ராஞ்சி:

81 இடங்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபைக்கு 5 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களைவிட கூடுதலான இடங்களில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

அங்கு ஆளும்கட்சியாக இருந்த பாஜக மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.  

இந்த தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான  ஹேமந்த் சோரன் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் மிக அதிகமான வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றுள்ளார்.



தும்கா தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரைவிட 13 ஆயிரத்து 188 வாக்குகள் வித்தியாசத்திலும் பர்ஹைட்  தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரைவிட 25 ஆயிரத்து 740 வாக்குகள் வித்தியாசத்திலும் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

இதற்கிடையில், இதற்கிடையில், பாஜக சார்பில் அங்கு நடைபெற்ற ஆட்சிக்கு முதல் மந்திரியாக தலைமை தாங்கிவந்த ரகுபர் தாஸ் அம்மாநில கவர்னர் திரவுபதி முர்மு-வை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்.

அவரை தொடர்ந்து அங்கு புதிய அரசு அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள முன்னாள் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் இன்றிரவு கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

Tags:    

Similar News