செய்திகள்
கிறிஸ் கெய்ல்

100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை

Published On 2019-10-21 10:19 GMT   |   Update On 2019-10-21 10:19 GMT
இங்கிலாந்தில் நடைபெற்ற 100 பந்து கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் கிறிஸ் கெய்ல், ரபாடா மலிங்காவை எடுக்க எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டால் 100 பந்து கிரிக்கெட் தொடர் அறிமுகம் படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொடர் அடுத்த வருடம் ஜூலை 17-ந்தேதி முதல் ஆகஸ்ட் 16-ந்தேதி வரை நடக்கிறது.

இந்தத் தொடருக்கான ஏலம் நேற்று நடைபெற்றது. இதில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கானை ஏலம் எடுக்க 8 அணிகளும் போட்டியிட்டன. இறுதியில் டிரென்ட் ராக்கெட்ஸ் அணி அவரை ஏலம் எடுத்தது.

அந்த்ரே ரஸல், ஆரோன் பிஞ்ச், முஜீப் உர் ரஹ்மான், சுனிலை நரைன், இம்ரான் தாஹிர், மேக்ஸ்வெல் ஆகியோர் முதல் சுற்றிலேயே ஏலம் எடுக்கப்பட்டனர்.

ஆனால் டி20 கிரிக்கெட்டில் யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்லை எந்த அணியும் ஏலம் எடுக்க ஆர்வம் காட்டவில்லை. அதேபோல் தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா, இலங்கை யார்க்கர் மன்ன் மலிங்கா ஆகியோரையும் எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை.
Tags:    

Similar News