தொழில்நுட்பம்
கேலக்ஸி நோட் 10 பிளஸ் 5ஜி ஸ்பை படம்

இணையத்தில் லீக் ஆன கேலக்ஸி நோட் 10 பிளஸ் 5ஜி

Published On 2019-07-25 10:47 GMT   |   Update On 2019-07-25 10:47 GMT
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.



சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் ஆகஸ்ட் 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஏற்கனவே ஸ்மார்ட்போனின் பெரும்பாலான அம்சங்கள் இணையத்தில் வெளியாகிவிட்டது. அந்த வகையில் கேலக்ஸி நோட் சீரிஸ் இருவித வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது.

ஆகஸ்ட் 7 ஆம் தேதி நிகழ்வில் கேலக்ஸி நோட் 10, கேலக்ஸி நோட் 10 பிளஸ் மற்றும் நோட் 10 பிளஸ் 5ஜி வேரியண்ட் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கேலக்ஸி நோட் 10 பிளஸ் 5ஜி வேரியண்ட் புகைப்படம் ட்விட்டரில் வெளியாகியுள்ளது. 

இதில் ஸ்மார்ட்போன் வெரிசான் பிராண்டிங் கொண்டிருக்கிறது. இதனால் அமெரிக்கவில் கேலக்ஸி நோட் 10 பிளஸ் வெரிசான் 5ஜி நெட்வொர்க்கில் கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது. புதிய புகைப்படங்களின் படி கேலக்ஸி நோட் 10 பிளஸ் 5ஜி மாடலில் மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என தெரிகிறது.



கேலக்ஸி நோட் 10 பிளஸ் 5ஜி வேரியண்ட் விலை 1300 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 90,000) வரை நிர்ணயம் செய்யப்படலாம். முன்னதாக கேலக்ஸி நோட் 10 பிளஸ் மாடலின் பிரெஸ் ரென்டர்கள் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 மாடலுடன் இணையத்தில் லீக் ஆனது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி நோட் 10 பிளஸ் மாடலில் 6.8 இன்ச் QHD+ டைனமிக் AMOLED டிஸ்ப்ளே, 4300 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. UFS 3.0 மெமரி வழங்கப்படுகிறது. இத்துடன் 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.
Tags:    

Similar News