ஆன்மிகம்
கணபதி

திருமணத் தடை நீக்கும் கணபதி மாங்கல்ய பூஜை

Published On 2020-03-20 05:31 GMT   |   Update On 2020-03-20 05:31 GMT
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், பெரிந்தல்மன்னா என்ற இடத்தில் அமைந்துள்ள பகவதியம்மன் கோவிலில் இருக்கும் கணபதி சன்னிதியில், திருமணத் தடை உள்ள இளைஞர்கள், இளம்பெண்கள் மாங்கல்ய பூஜை செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்கின்றனர்.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், அங்காடிபுரம் அருகில் உள்ளது, பெரிந்தல்மன்னா என்ற இடம். இங்கு அமைந்துள்ள பகவதியம்மன் கோவிலில் இருக்கும் கணபதி சன்னிதியில், திருமணத் தடை உள்ள இளைஞர்கள், இளம்பெண்கள் மாங்கல்ய பூஜை செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்கின்றனர்.

இக்கோவிலில் உள்ள விநாயகர் சன்னிதியில் மலையாள நாட்காட்டியின்படி துலாம் (ஐப்பசி) மாதம் முதல் வெள்ளிக் கிழமை நாளில், திருமணமாகாத இளைஞர்கள், இளம்பெண்கள் மாங்கல்ய பூஜை செய்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. முன்பு ஆண்டுக்கொரு முறை நடைபெற்று வந்த இந்த மாங்கல்ய பூஜையானது, பூஜை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றதால், தற்போது ஒவ்வொரு வாரமும், செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்று வாரத்திற்கு மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், அங்காடிபுரம் என்ற இடத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெரிந்தல்மன்னாவில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. திருச்சூரில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவிலும், குருவாயூரில் இருந்து 55 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்காட்டில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலும், காடம்புழாவில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும் இக்கோவில் இருக்கிறது. மேற்கண்ட ஊர்களில் இருந்து அங்காடிபுரம் சென்று, பின்னர் அங்கிருந்து கோவிலுக்குச் செல்லலாம். அங்காடிபுரம் செல்லவும், அங்கிருந்து பெரிந்தல்மன்னாவிற்குச் செல்லவும் பேருந்து வசதிகள் இருக்கின்றன.

Tags:    

Similar News