உள்ளூர் செய்திகள்
தேர்வு மையத்தில் கலெக்டர் விஷ்ணு ஆய்வு செய்த காட்சி.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் பிளஸ்-2 தேர்வு மையங்களில் பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு

Published On 2022-05-05 10:06 GMT   |   Update On 2022-05-05 10:06 GMT
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று பிளஸ்-2 தேர்வுகள் தொடங்கியது. தேர்வு மையங்களில் பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
நெல்லை:

தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 மாணவர்களுக்கு தேர்வு தொடங்கியது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பிளஸ்-2 தேர்வையொட்டி 221 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 73 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. மாவட்டம் முழுவதிலும் மொத்தம் 182 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் எழுத உள்ள இந்த தேர்வுக்காக பள்ளிகளில் 69 மையங்களும், மத்திய சிறைச்சாலையில் ஒரு தனிதேர்வருக்காக 1 மையமும், 3 தனித்தேர்வு மையங்களும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

மாவட்டம் முழுவதும் இன்று பள்ளிகளில் பிளஸ்-2 தேர்வை 21, 345 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். மத்திய சிறையில் உள்ள மையத்தில் 7 பேரும், 354 தனித்தேர்வர்களும் என மொத்தம் 21 ஆயிரத்து 706 பேர் எழுதுகின்றனர்.

தேர்வையொட்டி மையங்களை கண்காணிப்ப–தற்காக பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு இருந்தனர். மொத்தம் உள்ள 73 மையங்களுக்கும் முதன்மை கண்காணிப்பாளர்கள் 73 பேர் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர்.

அவர்கள் மேற்பார்வை–யில் சுமார் 186 பறக்கும் படை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.  மேலும் தேர்வு முடியும் வரை பள்ளிகளில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

9 மணி முதல் மாணவ-மாணவிகள் தேர்வு மையங்களுக்கு அனுமதிக்கப்பட்டனர். 9.45 மணிக்குள் உள்ளே வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி சில தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு செய்தார்.

தேர்வர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் குறைபாடு உள்ளதா எனவும் கேட்டறிந்தார். இதேபோல் மாவட்ட கலெக்டர் விஷ்ணு பாளை பர்கிட்மாநகரில் உள்ள அரசு பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.

தென்காசி மாவட்டத்தில் 63 மையங்களில் பிளஸ்-2 தேர்வு நடைபெற்றது. இதனை சுமார் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர். தேர்வையொட்டி பறக்கும் படை அதிகாரிகள் தேர்வு மையங்களில் திடீர் சோதனை நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 ேதர்வை  மொத்தம் 20,370 மாணவ-மாணவிகள் எழுதுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

இதற்காக மாவட்டம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த 85 மையங்களுக்கு இன்று காலை 9 மணிக்கு மாணவ-மாணவிகள் வரத்தொடங்கினர். தொடர்ந்து 10.15 மணிக்கு தேர்வுகள் தொடங்கின.

முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்றாலும் சில மையங்களில் மாணவ-மாணவிகள் முகக்கவசம் அணிந்து தேர்வு எழுதினர். கலெக்டர் செந்தில்ராஜ் கால்டுவெல் பள்ளி, சுப்பையா வித்யாலயா பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
Tags:    

Similar News