செய்திகள்
கோப்புபடம்.

போதையில் கல்லூரி மாணவர்கள் ரகளை - அவினாசி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

Published On 2021-10-24 07:48 GMT   |   Update On 2021-10-24 07:48 GMT
அவிநாசி பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்யும் சமூக விரோத செயல்கள் அதிகளவில் நடக்கிறது.
அவினாசி:

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அய்யன்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பழனாத்தாள்( வயது 72). இவர் மாடுகளை மேய்த்து விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர் பழனாத்தாளை கீழே தள்ளி விட்டு இரு காதுகளையும் கூர்மையான ஆயுதத்தால் அறுத்து, அவர்  அணிந்திருந்த இரு கம்மல்களையும் பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டார். 

இதுகுறித்து அவிநாசி போலீ சார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர். இந்நிலையில் ராயம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள்அவிநாசி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் டி.எஸ்.பி., பவுல்ராஜ், இன்ஸ்பெக்டர் முரளி ஆகியோரிடம்  புகார் மனு அளித்தனர்.அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

சங்கமாங்குளத்துக்குள் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு இளைஞர்கள் கூட்டாகவும், தனித்தனியாகவும் போதை ஊசி, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்தி சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். அவிநாசி நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கஞ்சா விற்பனை, தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யும் சமூக விரோத செயல்கள் அதிகளவில் நடக்கிறது. 

கொள்ளை சம்பவங்களும் அதிகரித்துள்ளது. எனவே இதனை தடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். 

அப்போது டி.எஸ்.பி., பவுல்ராஜ் கூறுகையில், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். ராயம்பாளையம் பகுதியில் முக்கியமான இடங்களில் ஊர் மக்களே இணைந்து கண்காணிப்பு கேமரா பொருத்தினால், இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்க முடியும் என்றார். 
Tags:    

Similar News