செய்திகள்
சித்தரிப்பு படம்

ஜி.எஸ்.டி. வருவாய் 3 மாதங்களுக்கு பின்னர் ஒரு லட்சம் கோடியை கடந்தது

Published On 2019-12-01 09:21 GMT   |   Update On 2019-12-01 09:21 GMT
பொருளாதார மந்தநிலையால் கடந்த 3 மாதங்களில் குறைவாக இருந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) வருவாய் நவம்பர் மாதத்தில் ஒரு லட்சத்து 3 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி:

மத்திய அரசின் ஒருங்கிணைந்த வரிவிதிப்பு முறையான சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) வருவாய் பொருளாதார மந்தநிலையால் கடந்த 3 மாதங்களில் மிகவும் குறைந்திருந்தது.

இந்நிலையில், கடந்த (நவம்பர்) மாதத்தின் ஜி.எஸ்.டி. வரி வருவாய் கடந்த ஆண்டை விட 6 சதவீதம் ஏற்றம் கண்டு ஒரு லட்சத்து 3 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
 
இந்த ஒரு லட்சத்து 3 கோடி ரூபாய் மொத்த ஜி.எஸ்.டி. வருவாயில் மத்திய ஜி.எஸ்.டி. ரூ.19,592 கோடி, மாநில ஜி.எஸ்.டி. ரூ.27,144 கோடி, (இறக்குமதி வரி ரூ.20,948 கோடி உள்பட)  ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.49,028 கோடி, (இறக்குமதி வரி ரூ.869 கோடி உள்பட) கூடுதல் ’செஸ்’ வரி ரூ.7,727 கோடி என மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ள
Tags:    

Similar News