வழிபாடு
சபரிமலை ஐயப்பன் கோவில்

சபரிமலையில் வெளிமாநில பக்தர்களின் வருகை அதிகரிப்பு

Published On 2021-12-16 06:04 GMT   |   Update On 2021-12-16 06:04 GMT
தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வர தொடங்கி உள்ளனர்.
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு திருவிழாக்களில் நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை விழா வருகிற 26-ந் தேதி நடக்கிறது. இம்முறை கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கோவிலுக்கு தினமும் 45 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

மேலும் கோவில் சன்னிதானத்தில் தங்கவும், பம்பையில் புனித நீராடவும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

மண்டல பூஜை விழா நெருங்கி வரும் நிலையில் வெளிமாநில பக்தர்கள் வருகையும் அதிகரித்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வர தொடங்கி உள்ளனர்.

இவர்களில் கன்னிசாமிகளும் அதிகமாக உள்ளனர். அவர்கள் நீலிமலை பாதை வழியாகவும் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

வழக்கமாக சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு காலங்களில் அதிரடிப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மண்டல பூஜை முதல் மகர விளக்கு விழா முடியும் வரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

கடந்த ஆண்டு கொரோனா பிரச்சினை காரணமாக பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது. இதனால் பாதுகாப்பும் அதிகமாக இல்லை. இம்முறை கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் வருகையும் அதிகரித்து உள்ளது. இதையடுத்து நேற்று முதல் சபரிமலையில் கூடுதலாக ஒரு எஸ்.பி. தலைமையில் 350 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News