தொழில்நுட்பம்
விவோ ஸ்மார்ட்போன்

ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் விவோ ஸ்மார்ட்போன்கள்

Published On 2021-01-11 05:38 GMT   |   Update On 2021-01-11 05:38 GMT
ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11 அப்டேட் பெறும் விவோ ஸ்மார்ட்போன்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

விவோ நிறுவனம் வி20 ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11 கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து விவோ எக்ஸ்50 ப்ரோ மற்றும் வி20 ப்ரோ போன்ற மாடல்களுக்கு கடந்த மாதம் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்பட்டது.

தற்சமயம் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11 அப்டேட் பெறும் இதர விவோ ஸ்மார்ட்போன்கள் பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.



அதன்படி இம்மாத இறுதியில் விவோ வி19, விவோ எக்ஸ்50 ஸ்மார்ட்போன்களுக்கும் மார்ச் மாத இறுதியில் விவோ வி17, வி17 ப்ரோ, வி15 ப்ரோ மற்றும் விவோ எஸ்1 போன்ற மாடல்களுக்கும் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11 அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.

இதைத் தொடர்ந்து ஏப்ரல் மாத இறுதியில் விவோ எஸ்1 ப்ரோ, இசட்1எக்ஸ், இசட்1 ப்ரோ போன்ற மாடல்களுக்கும் ஜூன் மாத இறுதியில் விவோ வி15 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11 அப்டேட் வழங்குவதாக விவோ நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

முதற்கட்டமாக பீட்டா அப்டேட் பேட்ச்களாக வெளியிடப்பட்டு அதன்பின் ஸ்டேபில் அப்டேட் வழங்கப்படும் என விவோ அறிவித்து உள்ளது. மேற்கண்ட பட்டியலில் விவோ வை சீரிஸ், யு சீரிஸ் மற்றும் சில வி சீரிஸ் மாடல்கள் இடம்பெறவில்லை. இவற்றுக்கு புது ஒஎஸ் அப்டேட் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
Tags:    

Similar News