செய்திகள்
வருமானவரி

வருமானவரி கணக்கு தாக்கலுக்கு கால அவகாசம்- அதிகாரிகள் தகவல்

Published On 2021-05-04 04:06 GMT   |   Update On 2021-05-04 13:50 GMT
கொரோனா நோய் பரவல் காரணமாக, வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கு போதிய கால அவகாசம் வழங்க வரி செலுத்துபவர்கள், வரி ஆலோசகர்கள் வருமானவரித்துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
சென்னை:

வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2019-2020-வது நிதியாண்டிற்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இந்த ஆண்டு கடந்த மார்ச் மாதம் 31-ந்தேதியுடன் முடிந்தது. இருந்தாலும் தற்போது இந்த கால அவகாசம் வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்து உள்ளது.

வருமானவரி துறையின், நோட்டீஸ் பெற்றவர்கள், வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த ஏப்ரல் 1-ந்தேதியுடன் முடிவடைந்தது. இதுவும் தற்போது வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.



கொரோனா நோய் பரவல் காரணமாக, வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கு போதிய கால அவகாசம் வழங்க வரி செலுத்துபவர்கள், வரி ஆலோசகர்கள் வருமானவரித்துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதை ஏற்று, வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது என்று வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Tags:    

Similar News