ஆன்மிகம்
ரிஷப வாகனத்தில் கற்பக விநாயகர்

விநாயகர் சதுர்த்தி 5-ம் நாள் விழா: ரிஷப வாகனத்தில் கற்பக விநாயகர்

Published On 2021-09-06 08:19 GMT   |   Update On 2021-09-06 08:19 GMT
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் நடைபெற்று வரும் விநாயகர் சதுர்த்தி திருவிழாவில் 5-ம் நாளான நேற்று ரிஷப வாகனத்தில் கற்பகவிநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பத்தூர் அருகே உள்ளது பிள்ளையார்பட்டி. இங்கு பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக இந்த விழா பக்தர்கள் அனுமதியின்றி எளிமையாக நடைபெற்றது.

அதேபோல் இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாகவும், அரசின் வழிகாட்டுதலின்படி 1-ம்தேதி தொடங்கியது. கொரோனா காலமாக உள்ளதால் தினந்தோறும் காலை மற்றும் இரவு ஆகிய நேரங்களில் உற்சவர் பிரகாரம் சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதன்படி தினந்தோறும் இரவு சிம்மம், பூதம், தாமரை, ரிஷபம், மயில், குதிரை, யானை ஆகிய வாகனங்களில் கற்பக விநாயகர் எழுந்தருளி பிரகாரத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் நடைபெற்று வரும் விநாயகர்சதுர்த்தி விழாவையொட்டி 2-ம் தேதி உற்சவர் விநாயகர் வெள்ளி மூஷிகம் மற்றும் சிறப்பு அலங்காரத்திலும், சண்டிகேசுவரர் ரிஷப வாகனத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

விநாயகர் சதுர்த்தி 2-ம் நாள் விழாவான 3-ம்தேதி இரவு கற்பக விநாயகர் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விநாயகர் சதுர்த்தி திருவிழாவில் 5-ம் நாளான நேற்று ரிஷப வாகனத்தில் கற்பகவிநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Tags:    

Similar News