செய்திகள்
ஜிகே வாசன்

மத்திய குழுவினர் வெள்ள சேத பகுதிகளை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்- ஜி.கே.வாசன்

Published On 2021-11-21 04:54 GMT   |   Update On 2021-11-21 04:54 GMT
தமிழக அரசும் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த முழு அறிக்கை ஒன்றை மத்திய குழுவினரிடம் அளிக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறினார்.
சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் பெய்த மழையால் மாநிலத்தில் சென்னை, கன்னியாகுமரி உள்பட பல்வேறு மாவட்ட பகுதிகளில் மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பகுதிகளில் விளைநிலங்களில் பயிரிடப்பட்ட விவசாய பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளது.



மழை, வெள்ளத்தால் தாழ்வான பகுதி வாழ் மக்களும், சாதாரண ஏழை, எளிய மக்களும் வருமானம் இன்றி, வாழ்வாதாரத்தை இழந்து நின்றார்கள். கனமழையால் விளைநிலங்கள், சாலைகள், மின்சார இணைப்பு, குடிநீர் வழங்கல், கழிவுநீர் பாதை ஆகியவை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மழை வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட மத்திய குழுவினரின் ஆய்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

எனவே பாதிக்கப்பட்டுள்ள, சேதமடைந்துள்ள அனைத்தையும் மத்தியக் குழுவினர் முழுமையாக, சரியாக ஆய்வு செய்ய வேண்டும். இந்த ஆய்வின்போது பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோரிடமும் பாதிப்புகள் குறித்து கேட்க வேண்டும்.

தமிழக அரசும் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த முழு அறிக்கை ஒன்றை மத்தியக் குழுவினரிடம் அளிக்க வேண்டும்.

மத்தியக் குழுவினரும் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை
யால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு உரிய நிவாரணம் கிடைப்பதற்கு ஏற்ப ஆய்வு செய்து, மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கவும், அதன் மூலம் மத்திய அரசும் தமிழக மழை வெள்ள பாதிப்புக்கு உரிய நிவாரணம் வழங்கவும் வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Tags:    

Similar News