செய்திகள்
விபத்துக்குள்ளான வாகனங்கள்

நைஜீரியாவில் வேன்-லாரி மோதிய விபத்தில் 17 பேர் பலி

Published On 2019-08-23 16:59 GMT   |   Update On 2019-08-23 16:59 GMT
நைஜீரியா நாட்டில் பயணிகள் வேன் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அபுஜா:

நைஜீரியா நாட்டின் குவாரா மாநிலத்தில் உள்ள ஜேபா-இரோனி நெடுஞ்சாலையில் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வேனில் 19 பேர் பயணித்தனர். அந்த நெடுஞ்சாலையில் உள்ள வளைவு ஒன்றில் வேன் வேகமாக திரும்பியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் எதிரே வந்த சரக்கு லாரி மீது பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் வேனில் பயணம் செய்த 17 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து காயமடைந்த நபர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நைஜீரியாவில் மோசமான சாலைகள், அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச்செல்லுதல் மற்றும் அதிவேகமாக வாகனத்தை இயக்குதல் போன்ற காரணங்களால் அதிக விபத்துக்கள் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  
Tags:    

Similar News