செய்திகள்
வைகோ

ம.தி.மு.க. பிரமுகர் கைது- வைகோ கண்டனம்

Published On 2019-09-17 06:33 GMT   |   Update On 2019-09-17 06:33 GMT
ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் சுப்பிரமணி கைது செய்யப்பட்டதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை: 

ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் சுப்பிரமணி கைது செய்யப்பட்டதற்கு வைகோ கண்டனம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

கட்அவுட், பேனர் கூடாது, என் புகைப்படம் வைக்க கூடாது என்பதை முதன் முதலில் அறிவித்தவன் நான். ம.தி.மு.க. மாநாட்டிற்கு கொடி காட்டியதால் தொண்டர்களுக்கும் மாநகராட்சி ஊழியர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை விலக்கி விட மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் சென்றார். அவர் மீது 307- பிரிவில் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொய் வழக்கு போடப்பட்டுள்ளதை கண்டிக்கிறேன். போலீசாரின் அடக்கு முறையை கண்டித்து எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் மல்லை சத்யா தலைமையில் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மருத்துவர்கள் என்னை ஓய்வு எடுக்க கூறியதால் நான் பங்கேற்கவில்லை.

ஒரு ஈ, எறும்புக்கு கூட தீங்கு செய்யக்கூடாது என்று நினைப்பவன் நான். கொடி மரங்கள் கட்டியபோது ஏற்பட்ட கைகலப்பில் காயம் அடைந்த மாநகராட்சி ஊழியருக்காக வருந்துகிறேன். மாநகராட்சி ஊழியர்கள் எங்களுக்கு விரோதிகள் அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News