செய்திகள்
முக ஸ்டாலின்

நீட் தேர்வை தடுத்து நிறுத்தியது திமுக அரசுதான் - முதல்வருக்கு முக ஸ்டாலின் பதில்

Published On 2020-09-17 11:15 GMT   |   Update On 2020-09-17 12:14 GMT
நீட் தேர்வை தடுத்து நிறுத்தியது தி.மு.க. அரசுதான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
சென்னை:

தமிழக சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு இவ்வளவு பெரிய பிரச்சினையாக காரணம் தி.மு.க. அரசுதான் என்று குற்றம் சாட்டினார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தான் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், அப்போது காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் தி.மு.க.வும் அங்கம் வகித்தது என முதலமைச்சர் பழனிசாமி ஆவேசத்துடன் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து முதலமைச்சரின் குற்றச்சாட்டிற்கு தி.மு.க. தரப்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இது குறித்து விளக்கம் அறித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் தேர்வை கொண்டு வந்தது பா.ஜ.க. அரசு, அதனை ஆதரித்தது அ.தி.மு.க. அரசு. மாணவர்கள் தற்கொலைக்கு அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும்தான் காரணமே தவிர, தி.மு.க. அல்ல.

2010-ல் நீட் தேர்வு வரவில்லை. இந்திய மருத்துவக் கழகம் அப்படியொரு விதிமுறைகளை வகுத்தது. அப்போதைய தி.மு.க. அரசு உயர்நீதிமன்றத்தை நாடி தடையுத்தரவு வாங்கியது. தி.மு.க. அரசுதான் நீட் தேர்வை தடுத்து நிறுத்தியது” என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News