இஸ்லாம்
நாகூர் தர்காவுக்கு வந்தவர்களை படத்தில் காணலாம்.

நாகூர் தர்காவில் கொரோனா கட்டுப்பாடுகளின்படி வழிபட அனுமதி

Published On 2022-01-20 04:36 GMT   |   Update On 2022-01-20 04:36 GMT
பொங்கல் பண்டிகையையொட்டி மூடப்பட்ட நாகூர் தர்கா 5 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகளின்படி பேராலயத்தில் வழிபட மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களும் வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் சென்று வழிபட தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கடைகள், வர்த்தக நிறுவனங்களை திறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 5 நாட்கள் முக்கிய வழிபாட்டு தலங்களை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதன்படி நாகூரில் உள்ள பிரசித்திப்பெற்ற ஆண்டவர் தர்காவும் 5 நாட்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது. இங்கு பொதுமக்கள் கொரோனா கட்டுப்பாடுகளின்படி வழிபட அனுமதிக்கப்பட்டனர். வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டதால் நாகூர் சில்லடி கடற்கரை செல்லும் பாதை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
Tags:    

Similar News