தொழில்நுட்பம்
ஏர்டெல்

1Gbps டவுன்லோட் வேகம் வழங்கும் ஏர்டெல் 5ஜி

Published On 2021-06-14 10:12 GMT   |   Update On 2021-06-14 10:12 GMT
ஏர்டெல் நிறுவனம் மேற்கொண்டு வரும் 5ஜி சோதனை குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.


இந்தியாவில் 5ஜி வெளியீடு விரைவில் நடைபெற இருக்கிறது. பல்வேறு டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி சேவைக்கான சோதனையை துவங்கி இருக்கின்றன. டெலிகாம் நிறுவனங்களுக்கு மத்திய அரசு 5ஜி ஸ்பெக்ட்ரமை ஒதுக்கீடு செய்ய இருக்கிறது. எனினும், பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வி போன்ற நிறுவனங்களை 5ஜி சோதனையை துவங்க அனுமதி அளித்தது.



அந்த வகையில் நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களும் 5ஜி சோதனையை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. ஏர்டெல் நிறுவனம் குருகிராமில் 3.5GHz பேண்ட் மூலம் 5ஜி சோதனையை மேற்கொண்டு வருகிறது. ஏர்டெல் 5ஜி சோதனையில் அதிகபட்சம் 1Gbps வேகத்தில் டவுன்லோட் வேகம் கிடைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதனை உறுதிப்படுத்தும் வகையில் ட்விட்டரில் வெளியாகி இருக்கும் வீடியோவில், ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போனில் ஏர்டெல் 5ஜி 1Gbps டவுன்லோட், 100Mbps அப்லோட் வேகம் வழங்குகிறது. ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி நெட்வொர்க் எரிக்சன் உபகரணங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News