செய்திகள்
பிரதமர் மோடி

புதிய கல்வி திட்டங்களால் இந்தியா உலக அளவில் ஜொலிக்கும்- பிரதமர் மோடி நம்பிக்கை

Published On 2021-09-07 09:47 GMT   |   Update On 2021-09-07 09:47 GMT
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி மற்றும் பாராலிம்பிக் போட்டி ஆகியவற்றில் நமது வீரர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி:

ஆசிரியர் தின விழாவையொட்டி பல்வேறு கற்பித்தல் திட்டங்கள் தொடக்க விழா நிகழ்ச்சி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக இன்று நடந்தது. இவற்றை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார்.

மேலும் காதுகேளாதவர்கள் மற்றும் வாய் பேசாதவர்களுக்கான சைகை மொழி டிக்ஷனரியை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

‘சிக்சாக் பர்வ்’ 2021-ன் படி பல்வேறு தரமான பொருத்தமான கற்பித்தல் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கல்வியில் சிறந்த முன்னேற்றங்கள் ஏற்படும். புதிய கல்வித் திட்டங்கள் முறை மூலமாக நமது கல்வி வளர்ச்சி அடைவது மட்டுமல்லாமல் உலக அளவில் போட்டி போடுவதற்கு உகந்ததாக  இருந்து ஜொலிக்கும்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி மற்றும் பாராலிம்பிக் போட்டி ஆகியவற்றில் நமது வீரர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டார்கள். அவர்கள் நமது இளைஞர்களுக்கு ஒரு உந்துசக்தியாக  அமைந்தனர்.

என்னை சந்திக்க வந்த அந்த வீரர்களை, ‘‘நீங்கள் குறைந்தது 75 பள்ளிக்கூடங்களுக்காவது சென்று கல்வித் திட்டங்களில் பங்கேற்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டேன். அதை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

சுவச் பாரத் திட்டம், டிஜிட்டல் திட்டங்கள் போன்றவை கொண்டு வரப்பட்டன. அவை 7 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. தேசிய கல்வித் திட்டங்களும் சிறந்த முறையில் அமைந்துள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.


Tags:    

Similar News