தொழில்நுட்பம்
டிக்டாக்

டிரம்ப் உத்தரவை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுக்கும் டிக்டாக்

Published On 2020-08-24 07:20 GMT   |   Update On 2020-08-24 07:20 GMT
அமெரிக்காவில் டிக்டாக் நிறுவனத்திற்கு தடை விதிக்கும் டிரம்ப்பின் உத்தரவை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுக்க டிக்டாக் முடிவு செய்துள்ளது.

டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த மாத துவக்கத்தில் கையெழுத்திட்டார். இந்த தடை உத்தரவு 45 நாளில் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது. 

இந்த தடை உத்தரவு நடைமுறைக்கு வந்தவுடன் அமெரிக்காவை சேர்ந்த எந்த நிறுவனமும் டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்சுடன் எவ்வித பரிவர்த்தனைகளையும் செய்ய முடியாது.



இந்நிலையில், அதிபர் டிரம்ப் நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாக டிக்டாக் தெரிவித்து இருந்தது. மேலும் இதனை சரி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாக தெரிவித்தது. அந்தவரிசையில் தற்சமயம் டிரம்ப் உத்தரவை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக டிக்டாக் தெரிவித்து இருக்கிறது.

இது தொடர்பான பணிகளை இந்த வாரத்திலேயே துவங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக சீனாவின் வீசாட் நிறுவனம் அதிபர் டிரம்ப்பின் தடை உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்து இருந்தன.
Tags:    

Similar News