ஆன்மிகம்
பாடியில் உள்ள திருவல்லீஸ்வரர் ஆலயம்

ஆஞ்சநேயரின் தோஷம் நீங்கிய தலம்

Published On 2021-02-02 04:46 GMT   |   Update On 2021-02-02 04:46 GMT
சிவலிங்க தோஷம் அடைந்த ஆஞ்சநேயர் பாடியில் உள்ள திருவல்லீஸ்வரர் ஆலயத்திற்கு வந்து சிவபூஜை செய்து, விமோசனம் பெற்றார். சென்னையில் இருந்து15 கிலோ மீட்டர் தூரத்தில் பாடி உள்ளது.
ராவணனை வதம் செய்த பாவம் நீங்குவதற்காக, ராமபிரான் ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்ய நினைத்தார். இதற்காக காசியில் இருந்து சிவலிங்கத்தைக் கொண்டு வரும்படி அனுமனை பணித்தார். ஆனால் அவர் வர தாமதமானதால், கடற்கரை மணலில் சீதை பிடித்த சிவலிங்கத்திற்கு பூஜை செய்தார், ராமர்.

இந்த நிலையில் லிங்கத்துடன் அங்கு வந்த அனுமன், கோபத்தில் மணல் லிங்கத்தை தன்னுடைய வாலின் வலிமையால் பெயர்க்க முற்பட்டார். ஆனால் அது முடியாமல் மூர்ச்சையடைந்தார். மயக்கம் தெளிந்தபோது, தான் சிவலிங்க தோஷம் அடைந்ததை உணர்ந்தார். இதையடுத்து பாடியில் உள்ள திருவல்லீஸ்வரர் ஆலயத்திற்கு வந்து சிவபூஜை செய்து, விமோசனம் பெற்றார்.

இதை நினைவுகூறும் வகையில் இந்த ஆலய பிரகாரத்தில் ஒரு சிவலிங்கம் தனிச் சன்னிதியில் உள்ளது. அதன் அருகில் அனுமன், சிவலிங்கத்தை வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். சென்னையில் இருந்து15 கிலோ மீட்டர் தூரத்தில் பாடி உள்ளது.
Tags:    

Similar News