செய்திகள்
கோப்புபடம்

நெல்லை, தூத்துக்குடியில் டாஸ்மாக் கடைகள் 4 நாட்கள் மூடல்

Published On 2021-04-01 10:09 GMT   |   Update On 2021-04-01 10:09 GMT
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூட அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நெல்லை மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலை முன்னிட்டு வருகிற 4-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) முதல் 6-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு வரையிலும், வாக்கு எண்ணிக்கை நாளான மே மாதம் 2-ந்தேதியும் மதுபான சில்லறை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்களை அடைக்க வேண்டும்.

மேலும் எப்.எல்.-2 முதல் எப்.எல்.11 வரையிலான உரிமதலம் கொண்ட அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும். இதில் எப்.எல்.6-க்கு விதிவிலக்காகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

தேர்தலையொட்டி வருகிற 4-ந்தேதி முதல் 6-ந்தேதி இரவு வரையிலும், வாக்கு எண்ணிக்கை நாளான வருகிற மே மாதம் 2-ந்தேதியும் மதுக்கடைகள் அடைக்கப்பட்டு இருக்கும். எப்.எல்.-2 மற்றும் எப்.எல்.3 உரிமதலம் கொண்ட அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும். இதில் எப்.எல்.6-க்கு விதிவிலக்காகும்.

இந்த காலகட்டத்தில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மது கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் உள்ளிட்டவை கண்டறியப்பட்டால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News