செய்திகள்
கைது

உத்தமபாளையம் அருகே போலி மூக்குப்பொடி தயாரித்து விற்ற 4 பேர் கைது

Published On 2021-01-14 08:04 GMT   |   Update On 2021-01-14 08:04 GMT
உத்தமபாளையம் அருகே போலி மூக்குப்பொடி தயாரித்து விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து கார், எந்திரங்களை பறிமுதல் செய்தனர்.
உத்தமபாளையம்:

தேனி மாவட்டத்தில் பிரபல மூக்குப்பொடி தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் போலியான முகவரியோடு மூக்குப்பொடி தயாரித்து விற்பனை செய்வதாக தேனி போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்விக்கு புகார் வந்தது. இதையடுத்து உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு சின்னகண்ணு தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்த அவர் உத்தரவிட்டார்.

இந்தநிலையில் நேற்று உத்தமபாளையம் அருகே உள்ள ஆனைமலையன்பட்டியை சேர்ந்த அழகர் ராஜா (வயது 40) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், போடியை சேர்ந்த கதிரேசன் (49), முத்துராஜ் (45), முத்தழகு (48) ஆகிய 3 பேருடன் சேர்ந்து ஆனைமலையன்பட்டி, போடி, கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் எந்திரங்கள் மூலம் போலியான மூக்குப்பொடி தயாரித்து, அதில் பிரபலமான மூக்குப்பொடி கம்பெனியின் முகவரியை ஒட்டி பேக்கிங் செய்யப்பட்ட பாக்கெட்டுகளை மாவட்டம் முழுவதும் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அழகர் ராஜா, முத்தழகு உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 900 போலி மூக்குப்பொடி பாக்கெட்டுகள், பொடி தயாரிக்க பயன்படுத்தப்பட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான எந்திரங்கள் மற்றும் கார் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News