தொழில்நுட்பச் செய்திகள்
பி.எஸ்.என்.எல்

தாமதமாக வந்து சேர்ந்த நல்ல செய்தி- நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல் வழங்கப்போகும் சேவை

Published On 2022-02-21 06:44 GMT   |   Update On 2022-02-21 10:11 GMT
பி.எஸ்.என்.எல் நிறுவனம் டி.சி.எஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த சேவையை நாடு முழுவதும் வழங்கப்போகிறது.
பி.எஸ்.என்.எல் நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவையை வரும் சுதந்திர தினத்தன்று அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனத்துடன் இணைந்து 4ஜி சேவை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. 

இதுகுறித்து பி.எஸ்.என்.எல்லின் நுகர்வோர் இயக்க இயக்குனர்
சுஷில் குமார் மிஸ்ரா கூறியிருப்பதாவது:-

பி.எஸ்.என்.எல் நிறுவனம் டி.எஸ்.எஸ் நிறுவனத்தை தொழில்நுட்ப பங்குதாரராக கொண்டு 4ஜி சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்தியாவில் முதன்முறையாக 4ஜி சேவைக்கு உள்நாட்டு தொழில்நுட்பம் பயன்படவுள்ளது. இதற்காக நாடு முழுவதும் 1 லட்சம் தொலைத்தொடர்பு டவர்கள் நிறுவப்படவுள்ளன. 



பீகாரில் மட்டும் 4000 டெலிகாம் டவர்கள் நிறுவப்படும். ஸ்மார்ட் ட்வர்கள்களுக்கு பதிலாக பி.எஸ்.என்.எல் மோனோபோல்களை பயன்படுத்தவுள்ளது. இது குறைந்த விலையில் அதிக பயன் தரக்கூடியதாக இருக்கும்.

இவ்வாறு சுஷில் குமார் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இந்த நிதியாண்டில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்ட நிலையில், பி.எஸ்.என்.எல் மிக தாமதமாக 4ஜி சேவையை அறிமுகம் செய்கிறது. இருந்தாலும் இதன்மூலம் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்கள் கிடைக்கும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தற்போது சில குறிப்பிட்ட சர்க்கிள்களில் மட்டும் பி.எஸ்.என்.எல் 4ஜி சேவையை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News