செய்திகள்
ஓ.பன்னீர்செல்வம், எஸ்.பி.வேலுமணி

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓபிஎஸ் தேர்வு -எஸ்.பி.வேலுமணிக்கு கொறடா பதவி

Published On 2021-06-14 10:48 GMT   |   Update On 2021-06-14 10:48 GMT
சட்டமன்ற அதிமுக கொறடாவாக எஸ்.பி.வேலுமணி, துணை கொறடாவாக அரக்கோணம் ரவி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சென்னை: 

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வருகிற 21-ந் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்த கூட்டத்தில் பங்கேற்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கவும் சட்டமன்ற அ.தி.மு.க. கொறடாவை தேர்ந்தெடுப்பதற்கும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற இந்த கூட்டத்தில் சட்டமன்ற செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.



இக்கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் சட்டமன்ற அதிமுக கொறடாவாக எஸ்.பி.வேலுமணி, துணை கொறடாவாக அரக்கோணம் ரவி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

சட்டமன்ற அதிமுக பொருளாளராக கடம்பூர் ராஜூ, செயலாளராக அன்பழகன், துணை செயலாளராக மனோஜ் பாண்டியன் ஆகியோரும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
Tags:    

Similar News